( this poem/ song was written for Porgai.)
ஊருக்கு அப்பாலே,
ஓடைக்கு தெக்காலே
புதையல் பல பாத்திருக்கோம்
பாதுகாத்து வச்சிருக்கோம்.
தின்ற வாயைப் பாத்தாலே
தெரிந்து போகுமே – அந்த
திகட்டாத நாகப் பழத்தின்
ஊதாவை அணிந்து கொள்ளுங்க.
கரிய ராமர் உடம்பு போல
கண்ணைப் பறிக்குமே – அந்த
பரடிப் பழம் பாருங்க
பரவசமாய் வாங்குங்க.
பத்து வருஷம் போனால் தான்
காய்க்கும் இந்த நீலம்.
பாத்து மட்டும் ரசிச்சுக்கோங்க
அல்லம் பழத்து நிறத்தை.
கலக்கலா ஒரு பழமிருக்கு எங்க காட்டில
கல கலா என்று சொல்வோம் எங்க மொழியில.
சிறு நடு பெரு என்று மூன்று வகையுண்டு- அதிலே
நடு வகையின் பச்சை இப்ப உங்க கையிலே.
தங்கம் போல தகதகக்கும்
கனிகள் உண்டுங்க.
எங்கள் வீரப் பழம் காரப் பழம்
நிறத்தைச் சுவையுங்க.
நகம் பட்டா வெக்கப் படும்
அளிஞ்சி மரத்தின் பழத்தை
நாங்க கொண்டுவந்து கொடுத்திருக்கோம்
ஆரஞ்சு நிறத் துணியாய் .
உடம்பு முழுக்க முள்ளிருக்கும்
உள்ளத்திலே இனிப்பிருக்கும்.
சப்பாத்தி கள்ளிப் பழம்
பிழிந்திருக்கோம் சட்டையிலே
தேடி யெடுத்துக் கொண்டுவந்தோம்
சாமி தந்த சொத்துகளை .
ஆடிப்பாடிக் கொண்டாடுவோம்
தரைக்கு வந்த வானவில்லை.
🙂 beautiful and earthen. didn’t know kalakka yields green dye
இந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள கனிகளிலிருந்து இயற்கை சாயம் பெற இயலாது. நிறங்களுக்கான உதாரணமாகத் தான் சொல்லப்பட்டிருக்கின்றது.
காற்றில் பறந்த அனுபவமும்
வானவில் வண்ணங்களை பார்த்தது போலவும்
உள்ளம் உவந்து போனேன், நன்றி.