எல்லோர்க்கும் பெய்யும் மழை

ஒரு மாத காலமாக தவமிருக்கிறோம் ஒரு சொட்டு மழைக்காக. எங்கள் மலையைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் கொட்டி தீர்க்கிறது. நான் நினைத்துக் கொண்டிருந்தேன் நான் மிகவும் நல்லவன் என்று. நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என்றது பொய்த்துப் போனதோ? இல்லை, காலத்திற்கு ஏற்ப விதிகளை கடவுள் மாற்றி விட்டாரோ?ஊர் ஊராய் சென்று மரம் வெட்டும் கூட்டம் உள்ள இந்த மலைக்கு இது தான் சரியான தீர்ப்பு என்று முடிவு செய்து விட்டாரோ?
அது எப்படி சரியாகும்? மனிதருடன் விலங்குகளும், பறவைகளும், தாவரங்களும், மரங்களும், புழு பூச்சிகளும் சேர்ந்து அல்லவா வாடி நிற்கின்றன? அவை செய்த குற்றம் என்ன?

அதள பாதாளத்திலிருந்தும் தண்ணீரை தோண்டி எடுத்து விடும் இந்த நாகரிக சமுதாயம் அதை கரும்பாக, கிழங்காக, வெளிநாடு செல்லும் வெள்ளரிக் காயாக , காசாக மாற்றி , அதை எண்ணி எண்ணிப் பார்த்து பரவசமடைகிறது; காசு கொடுத்து, குடிக்க தண்ணீர் வாங்கிக் கொள்கிறது. காசிருந்தால் எதையும் செய்யலாம் என்று வருங்கால சந்ததியையும் குட்டிசுவராக்கி முன்னேறி(!) சென்று கொண்டிருக்கிறது. அந்த கடவுளுக்கும் உண்டியலில் காசைப் போட்டு சரிக்கட்டி விடலாம் என்று நினைக்கிறது. ஆனால் கடவுளின் திட்டமோ வேறு மாதிரி போய்க் கொண்டிருக்கிறது – மொத்த மனித இனத்தையே ஒழித்துக் கட்டினால் தான் மற்ற உயிரினங்கள் வாழ முடியும் என்பது தெளிவாக தெரியும் ஒரு தீர்ப்பு. மழையினால் சிலரை, மழையே இல்லாமல் சிலரை என்று அழிக்கும் வேலை தொடங்கி விட்டது போல் தோன்றுகிறது.

இதில் collateral damage ஆக, என்னைப் போன்ற சிலரை ( நல்லவர்களை 🙂 ) காவு கொடுக்க அவர் தயங்குவாரா என்ன?

Advertisements

3 thoughts on “எல்லோர்க்கும் பெய்யும் மழை

  1. மனதை நெருடும் விஷயம்.
    ஒரு சிலரின் சுயநலத்துக்காக ஓர் சமுதாயமும், சிலபல தலைமுறைகளும் காவு கொடுக்ககப்படும் அவலம். அதற்கு எதிர் வினையாற்ற இயலாத கையறு நிலையில் நாம்.

  2. என் புலம்பல் தாங்க முடியாமல், மழை அனுப்பிக் கொடுத்த கடவுளுக்கு நன்றி. தயவு செய்து மாதம் மும்மாரி பொழியவும் ஏற்பாடு செய்யவும். நான் மிக நல்லவன்!!

  3. நண்பர் ஒருவர் ஒரு நல்ல கடினமான கேள்வி எழுப்பினார். “நம்மைப்” போன்ற படித்தவர்கள் எல்லா வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு, சுற்றுச் சூழல் பற்றி பேசலாம். அன்றாட வாழ்வே போராட்டமாயிருக்கும் கிராம மக்கள் தான் இதில் collateral damage என்று சொன்னார்.
    அவர் மேலும் சுட்டிக் காட்டினார் என்னுடைய SUVயும், பலப்பல மேல் நாட்டு பயணங்களும் ஏற்படுத்தும் பாதிப்பை விட, இந்த மக்கள் ஏற்படுத்தும் பாதிப்பு மிகக் குறைவே என்று. இதில் எனக்கு முழுமையான உடன்பாடில்லை என்றாலும், ஓரளவு உண்மையே. நான் விளைவிக்கும் renewable energy projects பயன்கள் என் பங்களிப்பை positive ஆவே வைத்திருப்பதாக நம்புகிறேன்.

    எளிமையான விடை இல்லாத கேள்வி இது. . .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s