பசங்கள் அதிகம் படிப்பதில்லை!

Translated from this article: https://www.theatlantic.com/education/archive/2018/09/why-girls-are-better-reading-boys/571429/

அமெரிக்கா போன்ற வளர்ந்த மேம்பட்ட நாடுகள் சென்ற நூற்றாண்டில் கல்வித் துறையில் ஒரு உன்னதமான மாற்றத்தைக் கண்டிருக்கின்றன : ஒரு காலத்தில் பள்ளிகளிலிருந்தும் கல்லூரிகளிலிருந்தும் புறக்கணிக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட சிறுமிகளும் பெண்களும் இன்று அந்த நிறுவனங்களில் பெருமளவில் இடம் பிடித்து விட்டார்கள். 1970களில், மொத்த மாணவர் தொகையில் 40 விழுக்காடே இருந்த பெண்கள் இன்று 56 விழுக்காட்டில் பெரும்பான்மை பெற்று முன் நிற்கிறார்கள்.

இந்த முன்னேற்றத்திற்கு பல காரணங்கள் இருந்தாலும், அதிகம் முன் வைக்கப்படாத ஒரு காரணம் உண்டு: சிறுவர்களை விட சிறுமிகள் அதித அளவில் புத்தகம் படிக்கிறார்கள் என்பது தான் அது. இங்கிலாந்திலுள்ள ஸ்காட்லாந்தின் டண்டீ பல்கலைக்கழகத்தின் கல்வி/சமூகத்துறை பேராசிரியர் கீத் டாப்பிங் குழந்தைகளின் படிக்கும் பழக்கம் பற்றி நடத்திய ஆய்வு முடிவில் மூன்று காரணிகளை முன்வைக்கிறார்.

  1. சிறுமிகளோடு ஒப்பிட்டு நோக்கும் போது சிறுவர்கள் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் குறைவாகவே ஆர்வம் காட்டுகிறார்கள்.
  2. நடுநடுவே பத்திகளை விட்டுப் படிக்கிறார்கள் அல்லது முழுப் பகுதிகளையே படிக்காமல் விடுகிறார்கள்.
  3. பெரும்பாலும் தங்கள் வாசிப்பு திறனுக்கும் கீழே உள்ள புத்தகங்களையே தேர்ந்தெடுக்கிறார்கள் .

அவர் அடுத்து சொல்கிறார் சிறுமிகள் எல்லாவற்றையும் முழுமனதுடன் செய்ய தலைப்படுகிறார்கள். சிறுவர்களோ சில அல்லது பெரும்பாலான பள்ளிப் பாடங்களை அரைமனதுடனே அணுகுகிறார்கள்.” இன்னும் இது போல நடத்தப்பட்ட பலப்பல ஆய்வுகள் மூலம் சிறுமிகள தம் மன மகிழ்ச்சிக்காகவே வாசிக்கிறார்கள் என்று புலப்படுகிறது.

ஆனால் இது பிரிட்டனில் மட்டுமுள்ள நிலையல்ல. வாசிப்பு ஆர்வத்தில் பெண்களின் முதனிலை எல்லா வளர்ந்த நாடுகளிலும் காணக் கிடைக்கிறது. 2009ம் ஆண்டில் உலக அளவில் 65 நாடுகளில் 15 வயதுடையோரின் கல்வித் திறன் பற்றி ஓர் ஆய்வநடத்தப்பட்டது. இதில் 64 நாடுகளில் சிறுவர்களை விட அதிக எண்ணிக்கையிலான சிறுமிகள் தம் உள்ளின்பத்திற்காக வாசிப்பதாக கூறினர். சராசரியாக இந்த நாடுகளில் ஆய்வில் பங்கெடுத்துக்கொண்டவரில் பாதி சிறுவர்களே இன்பத்திற்காக படிப்பதாக சொன்னார்கள். சிறுமிகளிலோ நான்கில் மூன்று பேர் இப்படி படிப்பதாக கூறினர். (இந்த புள்ளிவிவரம் வளர்ந்து வரும்/ ஏழை நாடுகளில் ஒத்து வராது ஏனெனில் இங்கே பெண்களின் படிப்பறிவு சூழல் ஆண்களுக்கு இருப்பதை விட குறைவாகவே உள்ளது.)

லகமெங்கும் இப்படி பெண்கள் ஆண்களை விட அதிகம் படிப்பதின் ரகசியம் ஆண் பெண் உடல்கூறு வேறுபாட்டால் அல்ல. “மூளைத்திறன் இருபாலார்க்கும் ஒன்று தான். வேறுபாடுகள் நிகழ்வது சமூக கட்டுப்பாடுகளினால் மட்டும மரபணுக்களால் அல்ல. பொதுவாக சிறுவர்கள் தமது சகாக்களின் மதிப்பை பெற வேண்டுமென்ற அழுத்தத்தல் அதிகம் பாதிப்படைகிறார்கள். அங்கே படிப்பது என்பது எள்ளி நகையாடப்படுகிறது” என்கிறார் சிகாகோ மருத்துவ கல்லூரியின் நரம்பியல் நிபுணர் லிசே எலியட்.

ஸ்திரேலியாவிலுள்ள கிரிபித் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உளவியல் நிபுணர் டேவிட் ரெய்லி சமீபத்தில் பங்கேற்ற வாசிப்பில் பாலின வேறுபாடுகள்பற்றிய ஆய்வில் மேற்கூறிய வாதங்களையே வந்தடைகிறார். அதனோடு கூட, விரும்பி, புரிந்து வாசிப்பது என்பது பெண்ணின் இயல்பு என்றும் சுட்டிக்காட்டுகின்றார். சிறுமிகள் சிறுவர்களை விட முன்னதாகவே மன முதிர்ச்சி அடைவதும் கூட இந்த வேறுபாட்டிற்கு காரணமாய் இருக்கலாம் என்கிறார். ஏன் சிறுவர்கள் வாசிக்கும் பழக்கம் ஏற்படுத்திக்கொள்வதை ஒரு போராட்டமாக பார்க்கிறார்கள் என்பதையும் விளக்குகிறார். “அவர்களது ஆர்வத்தை ரசனையை தூண்டும் சரியான இலக்கியத்தை கொடுங்கள். மிக விரைவில் அவர்கள் வாசிப்பில் மாற்றத்தை காண்பீர்கள் என்கிறார். நகைச்சுவை புத்தகங்களை உதாரணமாக சொல்கிறார்.

பள்ளிக்கூடங்கள் சிறுவரை கவர்ந்திழுக்கும் படியான யதார்த்தமான நகைச்சுவையான புத்தகங்களை நூலகங்களில் நிரப்ப வேண்டும். பல வேறு வகையான படைப்புகளை பல வேறு நோக்கங்களுக்காக வாசிக்கும் திறன் வெளியுலக வாழ்விற்கு இன்றியமையாத ஒன்றுஅறிவுறுத்துகிறார் கீத் டாப்பிங்.

மகளிருக்கு மட்டும் வாசிப்பதில் இவ்வளவு ஆர்வம் ஏன் என்ற இந்த புரிதல், லகெங்கும் விடாப்பிடியாக இருந்து வரும் பாலியல் ரீதியான கல்வித்துறை ஏற்ற தாழ்வுகளை ஆண் கல்வியின் பின்னோக்குத்தன்மையைஒழிக்க ஒரு வேளை உதவலாம்.

கட்டாயத்திற்காக அன்றி மகிழ்ச்சிக்காக படிக்கும் பழக்கம் வகுப்பறையிலும் நல்ல பலன் தரும். ரெய்லி சொல்கிறார் எந்த ஒரு திறமையையும் பயிற்சியால் மேம்படுத்தலாம். தன்னார்வம் கொண்டு பாட புத்தகங்களொடு மற்றவற்றையும் வாசிக்கும் சிறார்களுக்கு ஆயிரக்கணக்கான வாசிப்பு மணித்துளிகள் மேம்பட்ட வாழ்விற்கு வழிகாட்ட காத்திருக்கின்றன.”

ிறைய படியுங்கள், புதிய பார்வை பெறுவீர்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s